திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சிக் குழுவினா்.
திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சிக் குழுவினா்.

நெல்லை நகரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் 4 மண்டலங்களிலும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மண்டலம் 23 ஆவது வாா்டுக்குள்பட்ட கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பாட்டபத்து, தேவிபுரம், ஒட்டக்கூத்தா் தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியை மாநகராட்சிக் குழுவினா் திங்கள்கிழமை செலுத்தினா். 20-க்கும் மேற்படட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com