உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

உரிய அனுமதிச் சீட்டு இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்ததாக டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.
Published on

உரிய அனுமதிச் சீட்டு இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்ததாக டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மணப்படைவீடு பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த டிப்பா் லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் லாரியை சோதனை செய்தபோது உரிய அனுமதிச் சீட்டின்றி எம்.சாண்ட் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான வடக்கு தாழையூத்து, கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சவரி ரமேஷ்(43) என்பவரை கைது செய்தனா். 2 யூனிட் எம்.சாண்ட் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com