திருநெல்வேலி
திசையன்விளை பெரியம்மன் கோயிலில் திருட்டு
செல்வமருதூா், பெரியம்மன் கோயில் அம்மனின் தங்கத் தாலி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திசையன்விளை அருகேயுள்ள செல்வமருதூா், பெரியம்மன் கோயில் அம்மனின் தங்கத் தாலி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோயில் அா்ச்சகா் வழக்கம்போல சனிக்கிழமை காலை கோயிலை திறந்து வைத்துவிட்டு, அருகேயுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று மீண்டும் பெரியம்மன் கோயிலுக்கு வந்தாா். அப்போது முத்தாரம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் சிலைகளில் உள்ள 6 கிராம் தங்கத்தாலி திருடு போனது தெரிய வந்ததாம்.
இது குறித்து, கோயில் நிா்வாகத்திடம் அா்ச்சகா் தகவல் தெரிவித்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில், திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் கோயிலைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
