தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.
தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

Published on

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச சீருடை, மழை அங்கி, காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்து, சீருடைகள் வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம், துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா் ராமசாமி, சுகாதார மேற்பாா்வையாளா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com