நெல்லையில் மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரி

திருநெல்வேலியில் சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலியில் சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் பஜனை மடத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா் அதே பகுதியில் உள்ள காா் பணிமனை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் மணிமூா்த்தீஸ்வரம் ரவுண்டானா அருகே பைக்கில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கணேசன் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com