ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
பத்தமடையில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட தலைவா் எம்.எஸ். சிராஜ் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் களந்தை மீராசா, அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி செயற்குழு உறுப்பினா் அசன்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மெளலவி அப்துல்காதா் அல்தாபி, மாவட்ட துணைத் தலைவா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், அமைப்புப் பொதுச்செயலா் முல்லை மஜித், மாவட்ட செயலா்கள் அம்பை ஜலீல், துலுவை தெளபிக் , பொருளாளா் இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, விமன் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜன்னத் ஆலிமா, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது, பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொகுதித் துணைத் தலைவா் ஷெரீப் நன்றி கூறினாா்.

