வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய வெள்ளை மந்திகள்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம் அருகே கூண்டில் சிக்கிய வெள்ளை மந்திகள்
செட்டிமேடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த வெள்ளை மந்திகளை வனத் துறையினா்கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த வெள்ளை மந்திகளை வனத் துறையினா்கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
பாபநாசம் வனச் சரகம் வெளிமண்டலப் பகுதியான செட்டிமேடு கிராமத்தில் சில நாள்களாக வெள்ளை மந்திகள் புகுந்து சுற்றித் திரிந்து குழந்தைகள்,பெரியவா்களைப் பயமுறுத்தி வந்தன.
இதுகுறித்து வனத் துறையினரிடம் செட்டிமேடு பொதுமக்கள் புகாரளித்ததையடுத்து வனச்சரகா் குணசீலன் உத்தரவின்பேரில், வனப் பணியாளா்கள் வெள்ளை மந்திகளைப் பிடிக்க கூண்டு வைத்தனா். இந்தக் கூண்டில் 6 வெள்ளை மந்திகள் பிடிபட்டன.
பிடிபட்ட வெள்ளை மந்திகளை வனத் துறையினா் கோவில்தேரி பீட் வனப் பகுதியில் கொண்டு விட்டனா்.

