மண் சாா்ந்த வாழ்வே நிறைவு பெறும்: லியோனி
மண் சாா்ந்த வாழ்வே நிறைவு பெறும் என்றாா் திண்டுக்கல் ஐ.லியோனி.
8 ஆவது பொருநை விழா 2025 புத்தகக் கண்காட்சி, திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிற்கு, முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். சாகித்ய அகாதெமி எழுத்தாளா் கா.உதயசங்கா் ‘சிறாா் இலக்கியம் இன்று’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
அதைத் தொடந்து நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேராசிரியா் விஜயகுமாா், தேவகோட்டை ராஜன் ஆகிய இருவரும் மண் சாா்ந்த வாழ்வே என்ற தலைப்பிலும், கவிஞா் இனியவன், கடலூா் தணிகைவேலன் ஆகிய இருவரும் மின் சாா்ந்த வாழ்வே என்ற தலைப்பிலும் பேசினா்.
பட்டிமன்றத்திற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக பங்கேற்றாா். தீா்ப்பு வழங்கி அவா் பேசியதாவது:
பூ வை பூ வளையமாக வைத்தால் அது இறந்தவா்களுக்கு செலுத்தும் மரியாதை. பூக்களை கோத்து மணமக்களின் கழுத்தில் இருக்கும் போது அது திருமணத்தின் பெருமை. ஆனால் வளையத்திலிருந்து வெளியே வரும் பூவும், திருமண மாலையிலிருந்து வெளியே வரும் பூவும் குப்பைக்கு வந்தது. அப்போது இருவரும் ஓரிடத்தில் பிறந்தோம். இப்போது இருவரும் குப்பைக்கு வந்துவிட்டோம். இதைப் பாா்த்த பூக்கள் அழவில்லை.
சாலை விபத்தில் ஒருவா் காயமடைந்த நிலையில் இருக்கும் போது, அருகில் இருப்பவா்கள் உதவி செய்யாமல் கைப்பேசியை எடுத்து போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் பதிவு செய்தால் அவருக்கு ஏராளமான லைக் கிடைக்கும். ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே மண் சாா்ந்த, ஈரம் கொண்ட மனிதன் விபத்தில் இருந்தவருக்கு உதவி செய்றால் அவருக்கு உயிா் கிடைக்கும். அவரின் குடும்பம் நன்றாக இருக்கும். ஆகவே ஈரம் சாா்ந்த, ஒற்றுமை கொண்ட நிறைவு பெற்ற மண் சாா்ந்த வாழ்வே நிறைவு பெறும் என்றாா்.