கஞ்சா விற்றதாக 5 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக ஐந்து பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை போலீஸாா், சீவலப்பேரி சாலை நான்குவழிச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி மகன் அருண்குமாா் (27), பாளையங்கோட்டை காந்தி நகரை சோ்ந்த ராஜா மகன் வள்ளித்துரை (25), சந்திரசேகா் மகன் சினோத் (30), பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சோ்ந்த அபுல் உசேன் மகன் பீா் மைதீன் (34) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 1 கிலோ 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மற்றொருவா்: தேவா்குளம் போலீஸாா், பெட்ரோல் நிலைய பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜா (எ) கிருஷ்ணராஜா (23) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணராஜாவை கைது செய்து, 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.