பாக்கிய விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப்பணியின் போது அந்த வளாகத்தில் இருந்த அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயில் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கோயில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மங்கள இசை, திருமுறை பாராயண வேதிகை பூஜை, பிம்பசுத்தி உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்பின்பு யாகசாலையில் இருந்து திருக்குடம் எழுந்தருளி விமான மகா கும்பாபிஷேகம், அதைத் தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சந்தனக் காப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி, பிரசன்ன பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com