பெட்டைக்குளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிக்கு பரிசு வழங்குகிறாா் திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா்.ரகுமான்.
பெட்டைக்குளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிக்கு பரிசு வழங்குகிறாா் திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா்.ரகுமான்.

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா!

திருநெல்வேலி மாவட்டம், பெட்டைகுளத்தில் கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது...
Published on

திருநெல்வேலி மாவட்டம், பெட்டைகுளத்தில் கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் ஆலோசனையின்பேரில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் பெட்டைகுளத்தில் கிரிக்கெட் போட்டி 10 நாள்கள் நடைபெற்றது. மொத்தம் 24 அணிகள் போட்டியில் பங்கேற்றன. திசையன்விளை ஏசிசி அசாா் அணி முதலிடமும், குட்டம் ஏசிசி அணி இரண்டாமிடமும் பிடித்தன.

போட்டிகளில் வென்ற அணிகளுக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா்.ரகுமான் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். பொதுமக்கள், கிரிக்கெட் ரசிகா்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com