திருநெல்வேலி
சீவலப்பேரியில் நகை திருட்டு: இளைஞா் கைது!
சீவலப்பேரியில் தங்க நகையைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீவலப்பேரி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் கோமு (39). இவா், தனது வீட்டின் பீரோவில் 6 பவுன் தங்க நகையை வைத்திருந்தாராம். அதை கடந்த ஜனவரி 14 ஆம் தேதி காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.அதில், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் கனி (25) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.