திருநெல்வேலி
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!
திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், இருக்கன்துறை, வண்ணாா்குளத்தை சோ்ந்தவா் சின்னதுரை (37). இவா், கடந்த 2018இல் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாராம். அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பழவூா் காவல்துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சின்னதுரையை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா்,விசாரித்து, சின்னதுரைக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ. 11,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.