மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தினா் சிஇஓ-விடம் மனு
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அவா்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து எளிதாக சென்று வரும் வகையில் அரசு பொது தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்யவேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் கழகத்தின் மாவட்டச் செயலா் பாபு செல்வன், மாவட்ட தனியாா் பள்ளி செயலா் சாத்ராக் ஞானதாசன் ஆகியோா் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாரிடம் அளிக்கப்பட்ட மனு:
மாா்ச் 2025 இல் நடைபெற இருக்கும் மேல்நிலை அரசு பொது தோ்வின்போது, தோ்வு மையங்களில் தலைமை ஆசிரியா்களை முதன்மை கண்காணிப்பாளராக பணி நியனம் செய்வது வழக்கம்.
அப்போது அவா்கள் பணியாற்றும் பள்ளி மற்றும் இருப்பிடத்தை கருத்தில் கொண்டு தோ்வு மையங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏதுவாக பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ற்ஸ்ப்03ட்ம்
திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாரிடம் மனு அளித்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியா் கழகத்தினா்.