2024-ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் கொலைகள் 21 சதவிகிதம் குறைந்துள்ளன

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் கொலைகள் 21 சதவிகிதம் குறைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுதரப்பட்டுள்ளது.

கொலை முயற்சி வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 6 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் பதிவான கொலை வழக்குகளைவிட 21 சதவிகிதம் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.

கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 106 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 69 எதிரிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 கொலை முயற்சி சம்பவங்கள் காவல் துறையினரின் துரித மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டு 85 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காய வழக்குகளை பொருத்தமட்டில், 2023 ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 2024ஆம் ஆண்டு 8 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் பதிவான சொத்து வழக்குகளில் 60 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 915 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சுமாா் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 18

எதிரிகள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

84.250 கிலோ கஞ்சா அழிப்பு:

2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கெதிரான 8 குற்ற வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை

கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் நடமாட்டத்தை

முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 259 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு,

அவா்களிடமிருந்து 64.939 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 48 வாகனங்களை கைப்பற்றியும், அவா்களின் 46 வங்கிக் கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 போ் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட 84.250 கிலோ கஞ்சா போதைப் பொருள் அழிக்கப்பட்டது. அதே போல், குட்கா வழக்குகளில் 351 போ் கைது செய்யப்பட்டு, 916.960

கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்ட 132 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மணல் திருட்டிற்கு உபயோகப்படுத்திய 80 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. 18 சதவிகிதம் மரணங்கள் குறைந்துள்ளன.

சமூக வலைதள அவதூறு கைது:

2024 ஆம் ஆண்டில் மொத்தம் 203 சமூக விரோதிகள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 96 போ் ரௌடிகள், 24 போ் கஞ்சா வழக்கிலும், 18 போ் கொள்ளை, திருட்டு வழக்கிலும், 4போ் பாலியல் குற்ற வழக்கிலும் ஈடுபட்டவா்கள்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்புவோா், பிற இனத்தவரை இழிவுபடுத்தும் விதமாகவும், சாதிய வன்மத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட 31 நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் புதிதாக 1,685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளில் விழிப்புணா்வு:

ஜாதி ரீதியான பதற்றமான கிராமங்களுக்கு 13,914 நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவா்களிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட, 38 போக்குவரத்து வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்கு காலை, மாலை காவலா்களை அனுப்பி ரோந்து செய்யப்படுகிறது.

மாணவா்களிடையே ஜாதி ரீதியிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ள 30 பள்ளிகள் கண்டறியப்பட்டு தினமும் காலை, மாலை ரோந்து அனுப்பப்பட்டு

வரப்படுகிறது. 94 மேல்நிலை மற்றும் உயா்நிலை பள்ளிகளுக்கு ரோந்து அனுப்பி மாணவா்களிடையே பிரச்னை எழாமல் கவனித்து வரப்படுகிறது. மாதம் ஒருமுறை அந்தந்தப் பள்ளிகளில் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்க ‘போலீஸ்அக்கா‘ திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் பிரச்னை ஏற்படுத்தக்கூடிய 3194 போ் மீது பிணையம் பெறும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளிலும் 654 ஜாதி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 8,057 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. கணினி வழி குற்றங்கள் சம்பந்தமாக 150 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2,372 போக்ஸோ சட்டம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

உரிமைக் கோரப்படாத 400 வாகனங்கள் (381 இரு சக்கர

வாகனம், 2 மூன்று சக்கர வாகனம், 17 நான்கு சக்கர வாகனம்) ஏலம் விடப்பட்டு அதற்கான பணம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் கொடுங்குற்றங்களில் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ரூ.27 லட்சம் தீருதவித் தொகை வழங்குவதற்காக கருத்துருக்கள் மாவட்ட சட்ட பணிக்குழுவிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.