அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் கிடந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
பொட்டல்புதூா் சா்ச் தெருவைச்சோ்ந்த சுடலை மகன் முருகன் (62). கேரளத்தில் வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை இரவு தென்காசியில் இருந்து வள்ளியூா் சென்ற அரசுப் பேருந்தில் அம்பாசமுத்திரத்திற்கு சென்றுள்ளாா்.
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்காமல் மயங்கிய நிலையில் இருந்தவரை பேருந்து நடத்துநா் வேல்முருகன் பயணிகள் உதவியுடன் பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளாா்.
தொடா்ந்து மயக்கம் தெளியாமல் பேருந்து நிலையத்தில் கிடந்தவா் குறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து பாா்த்த போது முருகன் இறந்திருந்தது தெரிய வந்தது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.