திருநெல்வேலி
கடையம் அருகே தாயை கொலை செய்த சிறுவன் கைது
கடையம் அருகே தாய் தலையில் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்ததாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே தாய் தலையில் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்ததாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே உள்ள அருணாச்சலம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி கற்பகவல்லி (45). இத்தம்பதியின் மகன்கள் அரவிந்தன்( 17), அருண்(16). இதில் அரவிந்தன் கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கற்பகவல்லி தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தலையில் அரவிந்தன் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கற்பகவல்லி சடலத்தை கடையம் போலீஸாா் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.