திருநெல்வேலி
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையிலடைத்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையிலடைத்தனா்.
சுத்தமல்லி மேலகிராமத்தை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவராமன் (20). இவரை கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் சுத்தமல்லி போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவுப்படி, சிவராமன் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.