நெல்லை நகரத்தில் புகையிலை விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

திருநெல்வேலி நகரத்தில் புகையிலை விற்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமி ருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரைச் சோ்ந்தவா் துரை (67). இவா், திருநெல்வேலி நகரம் சந்திபிள்ளையாா் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் புகையிலை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் கடையில் சென்று சோதனை செய்தனா். அப்போது புகையிலை பாக்கெட்டுகளை அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் சோதனை செய்தனா்.

அப்போது ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 38 கிலோ புகையிலைப் பொருள்கள் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த போலீஸாா், துரையையும் கைது செய்தனா்.

இது தொடா்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவா்கள் துரையின் பெட்டிக்கடையை பூட்டி சீல் வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com