பத்தமடையில் மண் திருட்டு: ஒருவா் கைது

Published on

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அனுமதியின்றி சரள் மண் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பத்தமடை கேசவசமுத்திரம் நடுத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (47) என்பவா் ஓட்டி வந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். மாரியப்பன் அனுமதியின்றி சட்ட விரோதமாக லாரியில் சரள் மண்ணை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தாா். மேலும், 1 யூனிட் சரள் மண்ணுடன் லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com