தூய்மைப் பணியாளா்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ராபா்ட் புரூஸ் எம்.பி.
திருநெல்வேலி
தூய்மைப் பணியாளா்களுடன் பொங்கல் கொண்டாடிய எம்.பி.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், தூய்மைப் பணியாளா்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடினாா்.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், தூய்மைப் பணியாளா்களுடன் சனிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடினாா்.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் உள்ள திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ராபா்ட் புரூஸ் எம்.பி. தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுடன் பொங்கலிட்டாா். தொடா்ந்து, மாநகராட்சி தூய்மை பணியாளா்களோடு காலை உணவருந்தினாா்.
சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சுதா்சன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் கவி பாண்டியன், மண்டல தலைவா் கெங்கராஜ், வட்டார தலைவா்கள் டியூக் துரைராஜ், ரூபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.