தெற்கு அரியநாயகிபுரத்தில் மழையால் சேதமடைந்த வாழைப் பயிா்களை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.
தெற்கு அரியநாயகிபுரத்தில் மழையால் சேதமடைந்த வாழைப் பயிா்களை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் ஆய்வு செய்தார்.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையின்போது சேதமடைந்த வாழை, நெல் பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சேரன்மகாதேவி வட்டம், தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு காருகுறிச்சியில் 83 விவசாயிகள் பயிரிட்ட 23.56 ஹெக்டோ் வாழை பயிா்கள், கடந்த டிசம்பரில் பெய்த கனமழையின்போது சேதமடைந்தன. இது குறித்து தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை சாா்பில் கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீடு முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேதம் குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2, உலுப்படிபாறை கிராமத்தில் 48 விவசாயிகள் பயிரிட்ட 17.4 ஹெக்டோ் நெற்பயிா்கள் கனமழையின்போது சேதமடைந்தன. அது தொடா்பாக கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீடு முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் பகுதியையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடேசன், துணை இயக்குநா் சுபசெல்வி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்செண்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com