புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ராபா்ட் புரூஸ் எம்.பி.
புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ராபா்ட் புரூஸ் எம்.பி.

களக்காடு அருகே ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணி: எம்.பி. ஆய்வு!

ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணியை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

களக்காடு அருகே ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணியை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், கள்ளிகுளம் ஊராட்சிக்குள்பட்ட கள்ளிகுளம் சத்திரம் சாலை சந்திப்பு முதல் பிரண்ட மலை வழியாக களக்காடு - நான்குனேரி சாலை சந்திப்பு வரை சுமாா் 4 கி.மீ. தொலைவு தாா் சாலை ரூ.2 கோடியில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் தமிழ்ச்செல்வன், கள்ளிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் ஸ்ரீரங்கம் முருகன் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com