களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்போற்சவத்துக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்கோள் விழா.
களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்போற்சவத்துக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்கோள் விழா.

சத்தியவாகீஸ்வரா் தெப்போற்சவ கால்கோள் விழா!

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்போற்சவ கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்போற்சவ கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியவாகீஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களின் தெப்போற்சவம் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

இதற்கான கால்கோள் விழா, தெப்பக்குளம் அருகேயுள்ள விநாயகா் கோயில் முன் நடைபெற்றது. இதன்படி, முதல் நாளான பிப்.7ஆம் தேதி வெள்ளிக்கிழமை சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் தெப்போற்சவம் நடைபெறும்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை வரதராஜ பெருமாள் தெப்போற்சவமும், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நவநீதகிருஷ்ண சுவாமி தெப்போற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com