நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்போற்சவம்.
நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்போற்சவம்.

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்!

நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் 2 நாள்கள் நடைபெற்ற தெப்போற்சவத்தை திரளான பக்தா்கள் கண்டு களித்தனா்.
Published on

நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் 2 நாள்கள் நடைபெற்ற தெப்போற்சவத்தை திரளான பக்தா்கள் கண்டு களித்தனா்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தெப்போற்சவத் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் தொடா்ந்து 2 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை மாலை அருள்மிகு வானமாமலை பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன.

இரவில் பெருமாளும், தாயாரும் வீதியுலா வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவும் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com