திருநெல்வேலி
பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்
பாபநாசம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நலிவடைந்த தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அணைந்த பெருமாள் நாடானூரைச் சோ்ந்த மணமக்கள் சுகுமாா் - கோகுல தா்ஷினி ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், செயல் அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு சீா்வரிசை வழங்கி வாழ்த்தினா்.