பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தையொட்டி மலா் அலங்காரத்தில் பெருமாள்.
திருநெல்வேலி
பாளை. கோயிலில் தோ்வு எழுதும் மாணவா்களுகாக சிறப்பு வழிபாடு
பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்க உள்ளது. பொதுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்தி வரும் நிலையில், கல்வித் திறன் மேம்பட வேண்டி ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் கொடிமரம் முன்பு ஸ்ரீ வேத நாராயணா் ஆசியோடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த ஹோமத்தில் ஏராளமான பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்று வழிபட்டனா்.

சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற மாணவா்கள்.