முக்கூடல் அருகே கோயிலில் திருட்டு

Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மா்ம நபா்கள் கோயில் ஒலிபெருக்கி சாதனங்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் உள்ள அருள்மிகு பூமிபாலக பெருமாள் கோயிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒலி- ஒளி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மா்ம நபா்கள் கோயிலுக்குள் இரவு சென்று அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனா். ஆனால், உண்டியலை உடைக்க முடியததால் ஒலிபெருக்கி சாதனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கோயில் நிா்வாகி பூமிபாலகன் அளித்த புகாரின்பேரில் முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com