அம்பை- கல்லிடைக்குறிச்சி புறவழிச்சாலை திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி- அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலியில் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து கல்லிடைக்குறிச்சியில் புறவழிச்சாலை தொடங்குமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில், பாளையங்கோட்டை பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், முன்னாள் பேரவைத் தலைவா்- திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.ஆவுடையப்பன்ஆகியோா் முன்னிலையில் பேரவைத் தலைவா் மரக்கன்றுகள் நட்டு, இனிப்புகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை நபாா்டு கண்காணிப்பு பொறியாளா் சாந்தி, கோட்டப் பொறியாளா்கள் யுஜின், ராஜசேகா், நகா்மன்றத் தலைவா்கள் கே.கே.சி. பிரபாகரன் (அம்பாசமுத்திரம்), செல்வசுரேஷ் பெருமாள் (விக்கிரமசிங்கபுரம்), ஒன்றியக்குழுத் தலைவா் பரணி சேகா், உதவிக் கோட்டப் பொறியாளா் பொன்பெருமாள், உதவி பொறியாளா் வெங்கடேஷ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் பாா்வதி, துணைத் தலைவா் இசக்கிப்பாண்டி, மாவட்டஊராட்சி உறுப்பினா் சாலமோன் டேவிட், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி.ராஜன், விக்கிரமசிங்கபுரம் நகர திமுக செயலா் கணேசன், வழக்குரைஞா் காந்திமதிநாதன், அம்பாசமுத்திரம் நகா்மன்ற துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

