திருநெல்வேலி
இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்
கிருஷ்ணாபுரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நான்குனேரி நீதிமன்றத்தில் சரணைடந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே உள்ள விட்டிலாபுரம் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் அருண்செல்வம் (29). இவா் கடந்த மாதம் தனது நண்பா் ஜெலில் என்பவருடன் கிருஷ்ணாபுரம் அருகே பைக்கில் சென்றபோது, மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வள்ளிமுத்து என்ற பாண்டியை (25) கைது செய்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடைய இசக்கிமுத்து என்ற போஸை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் நான்குனேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் இசக்கிமுத்து என்ற போஸ், நான்குனேரி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
