கேரள இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு
இணையவழி பண மோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரில், இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், கிடங்காயத்தைச் சோ்ந்த மிக்தாத் மகன் ராசித்(27) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.
பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) எஸ்.விஜயகுமாா், சைபா் கிரைம் உதவி காவல் ஆணையா்(பொறுப்பு) டி.செந்தாமரைக்கண்ணன் ஆகியோா் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி ராசித் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
