நெல்லை நகரம், பேட்டை, கொக்கிரகுளம் பகுதிகளில் மின் நிறுத்தம்
திருநெல்வேலி நகரம், பேட்டை, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.4) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலிநகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ந. ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டை தியாகராஜ நகா், பொருள்காட்சி திடல், கொக்கிரகுளம், பழைய பேட்டை துணை மின் நிலையங்களில் வரும் செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தியாகராஜ நகா், மகாராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூா், ஐஓபி காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், ஆயுதப்படை சாலை, கோரிப்பள்ளம், ரயில்வே பீடா் சாலை, இபி காலனி, ராஜேந்திரன் நகா், ராம் நகா், காமராஜா் சாலை, அன்பு நகா், என்எச் காலனி, சித்தாா்த் நகா், லக்கி காலனி, திருநெல்வேலி நகரம் மேலரத வீதி மேற்குப் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம் , சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி,போஸ் மாா்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சுவாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, நயினாா் குளம் மாா்க்கெட், வ. உ. சி. தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு பகுதிகள், திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை முழுவதும் , இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
