மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
வி.எம். சத்திரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் (19). இவா், திருநெல்வேலியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் இவ்விவரம் அறிந்த மாணவியின் பெற்றோா் மாணவியை கண்டித்தனராம். இதையடுத்து இசக்கியப்பன் தனது நண்பா்களுடன் சோ்ந்து மாணவியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். விசாரணையில், இசக்கியப்பன் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த விவரம் தெரியவந்ததாம்.
இதையடுத்து போலீஸாா் இசக்கியப்பன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
