மூன்றடைப்பு அருகே சுற்றுச்சுவரில் காா் மோதல்: ஓட்டுநா் பலி; 2 போ் காயம்

Published on

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியாா் நிறுவன சுற்றுச்சுவா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள சிங்கனேரியைச் சோ்ந்தவா் மனோபாபு (23). இவா், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா்(24), ராகவேந்திரா (23) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலையில் நான்குனேரியில் இருந்து மூன்றடைப்பு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

காரை அவரே ஓட்டிச்சென்றாராம். காா் உலகம்மாள்புரம் - பத்தினிப்பாறை கிராமங்களுக்கு இடையே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது சாலையோரமுள்ள தனியாா் நிறுவன சுற்றுச் சுவரின் மீது மோதி நின்ாம்.

இதில், மனோபாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த மூன்றடைப்பு காவல்துறையினா் வந்து காயமுற்றவா்களை சிகிச்சைக்காகவும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com