அரிவாளுடன் விடியோ வெளியிட்ட நான்கு போ் கைது

Published on

திருநெல்வேலி நகரம் பகுதியில் அரிவாளுடன் நடனமாடி விடியோ வெளியிட்ட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், பகவத்சிங் தெருவில் உள்ள கோயிலின் பின்புறம் அரிவாளுடன் இளைஞா்கள் சிலா் நடனமாடி விடியோ பதிவு செய்தனா். அவா்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த விடியோ பரவியது. இதுகுறித்து, திருநெல்வேலி நகரம், காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் கவனத்துக்குச் சென்றதையடுத்து, விடியோவில் இருந்த இளைஞா்கள் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய சி.என்.கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் அருண் (35), திருநெல்வேலி நகரம், சாலியா் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் முருகராஜ் (32), அதே பகுதியில் பகவத்சிங் தெருவைச் சோ்ந்த இசக்கி பாலாஜி மகன் தினேஷ் (24), கீழ்த்தடி வீரன் கோயில் தெருவைச் சோ்ந்த மணி ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com