மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

Published on

மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலப்பாளையம் , ரெட்டியாா்பட்டி , புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதன்படி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், தெற்கு புறவழிச்சாலை, மேலகுலவணிகா்புரம், மேலப்பாளையம் பஜாா் திடல், ஜின்னா திடல், கணேசபுரம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், ராமச்சந்திரா காா்டன், ராமச்சந்திரா நகா் , பரணி பாா்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com