சுடச்சுட

  

  ஆக. 3 மாணவர்களுக்கு கல்விக்கடன்  வழங்கும் முதற்கட்ட சிறப்பு முகாம்

  By  நாகர்கோவில்  |   Published on : 01st August 2013 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முதற்கட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 3) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   குமரி மாவட்ட மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் 2013-14 ஆம் ஆண்டுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள வங்கியாளர்களின் முதற்கட்ட முகாமில் நாகர்கோவில் நகராட்சி, அகஸ்தீசுவரம், தோவாளை மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
   மாவட்டத்தில் பிற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும்.
   கல்விக்கடன் முகாமுக்கு வரும் மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் அதன் நகல் அல்லது ஏதேனும் ஒரு முகவரி சான்று, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் மற்றும் அதன் நகல்கள், சான்று செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள், பள்ளி இறுதி வகுப்பின் மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ், கலந்தாய்வின்போது, கல்லூரி ஒதுக்கீடு பெறப்பட்ட சான்று மற்றும் கல்லூரியில் பயின்று வருவதற்கான சான்று, பெற்றோர் அல்லது மூன்றாமவரின் உத்தரவாதம் மற்றும் அவர்களின் சொத்து மற்றும் கடன் பற்றிய விவரங்கள், கல்விக்கடனுக்கான சொத்து அல்லது ஏதேனும் பிணையம் தேவைப்படும் பட்சத்தில் அவற்றின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.
   வங்கி கடன் விண்ணப்பம் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் பற்றிய முழு விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்விக்கடன் வழங்கும் முதற்கட்ட முகாமில், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai