சுடச்சுட

  

  குமரியில் திருட்டு வழக்கில் கேரளத்தைச் சேர்ந்தவர் கைது

  By  நாகர்கோவில்  |   Published on : 01st August 2013 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
   கடந்த ஆண்டு பளுகல் அருகே உள்ள மந்தம்பாளையில் ராபின்சன் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சுதாகர், மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் தலைமையில் போலீஸôர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குழித்துறை பழைய பாலம் தீயணைப்பு நிலையம் அருகே போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் நெருவாமூடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பரை போலீஸôர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பளுகல் ராபின்சன் வீட்டில் நகை மற்றும் ரொக்கப்பணம் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸôர் கைது செய்து அவரிடமிருந்த 54 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai