சுடச்சுட

  

  குளப்புறம் ஊராட்சியில் கோழிக் கடைக்கு  அனுமதி வழங்கியதில் முறைகேடு

  By  களியக்காவிளை,  |   Published on : 01st August 2013 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் ஊராட்சியில் கறிக்கோழி இறைச்சிக் கடை நடத்த அனுமதி வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   குளப்புறம் ஊராட்சி கோழிவிளை அருகே மருதங்கோடு பகுதியில் இறைச்சிக் கோழிக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோழிகளை உரித்து இறைச்சி கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு வெட்டப்படும் கறிக்கோழிகளால் சுற்றுவட்டாரப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள மருதங்கோடு குளம் மாசடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
   இதையடுத்து இப்பகுதியிலிருந்து கறிக்கோழிக் கடையை அகற்றக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து முந்தைய ஆட்சியர் மதுமதியிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சுகாதாரக் கேடு விளைவிக்கும் இக் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
   இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் புகார் செய்ததைத் தொடர்ந்து முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லத்துரை கடையில் ஆய்வு மேற்கொண்டதுடன் ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.
   இதில் இறைச்சிக் கடை மற்றும் கட்டட உரிமம் உள்ளிட்டவை போலியானவை என தெரியவந்தது. மேலும் முந்தைய ஊராட்சித் தலைவர் ரேணுகா டேனியல் ஆவணங்களை ஊராட்சியில் பதிவு செய்யாமல் போலியாக வழங்கியிருப்பதும், இதற்கு அப்போதைய வரிவசூலிப்பவர் நிர்மல் நேசகுமார் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
   நிர்மல் நேசகுமார் தற்போது தூத்தூர் ஊராட்சியில் செயலராக உள்ளார்.
   இதையடுத்து, குளப்புறம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரேணுகா டேனியல் மற்றும் நிர்மல் நேசகுமார் ஆகியோர் மீது முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லத்துரை களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai