சுடச்சுட

  

  தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள நாட்டார் நிகழ்த்துக்கலை பற்றிய புரிதல் தேவை

  By நாகர்கோவில்  |   Published on : 02nd August 2013 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்ப் பண்பாட்டைப் புரிவதற்கு நாட்டார் நிகழ்த்துக்கலைகள்  குறித்த புரிதல் தேவை என எழுத்தாளர் பொன்னீலன் தெரிவித்தார்.

  நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் "பழந்தமிழ்க் கலைகளும் நீட்சியும்' என்ற நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவர்-செயலாளர் பொறியாளர் பெ. ஆறுமுகம் பிள்ளை தலைமை வகித்துப் பேசியது:

  இக்கல்லூரி தமிழ்த் துறை ஆய்வு மையம் நடத்திய ஒரு கருத்தரங்கில் படிக்கப்பட்ட 14 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பழங்கலைகள், கலைஞரும் நிகழ்த்துதலும்,  சடங்குகளும் கலை உணர்வுகளும் என்னும் மூன்று பகுதிகள் இந்நூலில் உள்ளன.

  இவற்றை எழுதியவர்கள் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் நாட்டுப்புறவியல் துறையில் பணியாற்றிய அறிஞர்கள். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழம்  இலக்கியங்களில் பரவிக்கிடக்கும் கலைகளின் கூறுகள் இன்றும் தமிழ்ச் சமூகத்தில் உள்ளதை விரிவாகக் கூறுகிறது இந்நூல் என்றார்.

  நூலை வெளியிட்டு பொன்னீலன் பேசியது: நாட்டார் நிகழ்த்துக்கலைகள் மக்களின்  வாழ்வுடன் கலந்து பண்பாட்டின் கூறுகளை வீரியத்துடன் வெளிப்படுத்துகின்றன.  பழம் இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, இரட்டைக் காப்பியங்கள் ஆகிய நூல்களில் நிகழ்த்துக்கலைகள் குறித்த செய்திகள் சில இடங்களில் குறிப்பாகவும், சில இடங்களில் விரிவாகவும் கூறப்பட்டுள்ளன.

  பண்டைக் காலத்தில் நிலவிய நாட்டார் தெய்வ வழிபாடு கூறுகளில் ஒன்றாகவே கலை நிகழ்த்துதலும் இருந்தது. சங்ககால மொழி செறிவுடையது. செவ்வியல் தன்மை  கொண்டது என்றார்.

  கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். பெருமாள் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத்  தலைவர் முனைவர் மு.சாந்தாள் வரவேற்றார். தமிழ்த் துறை பதிப்பாசிரியர் தெ.வே. ஜெகதீசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai