சுடச்சுட

  

  கொட்டாரம் வருவாய் கிராமம் (மேற்கு) அச்சன்குளத்தில் அம்மா திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  முகாமிற்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டைகள் ஆகியவற்றிற்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 65 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.

  உதவித்தொகையினை வட்ட வழங்கல் அதிகாரி ஷீலா வழங்கினார். கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் கோ.பூவன்பிள்ளை, துணைத் தலைவர் கண்ணன், பேரூராட்சி உறுப்பினர்கள் கணேசன், ரவி, அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினர்கள் நாகமணி, பொன்பாக்கியமகிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai