சுடச்சுட

    

    அனுமதியின்றி மது விற்க முயன்ற முதியவர் கைது

    By குலசேகரம்,  |   Published on : 03rd August 2013 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :குலசேகரம் அருகே அனுமதியின்றி விற்பனைக்காக மது வைத்திருந்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

    செருப்பாலூர் கல்லடிமாமூடு பகுதியில் குலசேகரம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக மூட்டையுடன் வந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், அயக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பதும், மூட்டையில் 75 மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai