சுடச்சுட

  

  திருச்செந்தூர் கோவில் வருவாய் ரூ.1.75 கோடியைத் தாண்டியது

  By திருச்செந்தூர்,  |   Published on : 03rd August 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் கோவிலில் ஜூலை மாத மொத்த வருவாய் ரூ1.75 கோடியைத் தாண்டியது.

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானது மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ம.அன்புமணி, சங்கரன்கோவில் துணை ஆணையர் இரா. பொன்சுவாமிநாதன், அலுவலகக்  கண்காணிப்பாளர்  இரா.சாத்தையா, ஆய்வர்கள் சி.முருகானந்தம், வெ.மாரியப்பன், தலைமைக் கணக்கர் பா.பட்டுராஜா உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், பொதுமக்கள்  முன்னிலையில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.

  இதன்படி ஜூலை 16-ம் தேதி எண்ணப்பட்ட உண்டியல்கள் வருமானம் ரூ.57,21,128. ஜூலை 29-ம் தேதி எண்ணப்பட்ட உண்டியல்கள் வருமானம் ரூ.34,62,594 ஆகும்.

  இதுபோக ஜூலை 31-ஆம் தேதி வரை கோவில் உள்துறை அலுவலகம் மூலம் 53 லட்சத்து 44 ஆயிரத்து 265 ரூபாயும், பக்தர்கள் தங்கும் விடுதி மூலம் ரூ.26 லட்சத்து, 23 ஆயிரத்து, 530-ம் வரவாகியிருந்தது. மொத்தமாக ஜூலை மாதம் மட்டும் திருக்கோவில் உண்டியல்கள், உள்துறை மற்றும் விடுதி மூலம் ரூ.1 கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 190 வருமானமாகக் கிடைத்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai