சுடச்சுட

  

  யூத் ரெட் கிராஸ்: இலக்கியப் போட்டியில் வென்றோர் விவரம் அறிவிப்பு

  By நாகர்கோவில்,  |   Published on : 04th August 2013 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்ட யூத்ரெட் கிராஸ் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையேயான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

  நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் இப் போட்டிகள் நடைபெற்றன. 18 கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

  போட்டிகளுக்கு கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் ஆறுமுகம்பிள்ளை தலைமை தாங்கினார்.

   பல்கலைக்கழக இளைஞர் நலத் துறை இயக்குநர் பேராசிரியர் சாக்ரட்டீஸ், போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

  விழாவில் கல்லூரி முதல்வர் பெருமாள், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் அகமத்கான், செயலர் மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  தமிழில் பேச்சுப் போட்டிக்கான முதல் இடத்தை நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் டேவிட் ஜெயசிங், இரண்டாவது இடத்தை உதயா கலை அறிவியல் கல்லூரி மாணவி அட்லின் சுபி பெற்றனர்.

  ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிக்கான முதல் இடத்தை செயின்ட் ஜெயரோம் கல்லூரி மாணவர் தீபக், இரண்டாம் இடத்தை புனித சிலுவைக் கல்லூரி மாணவி ஆஸ்மி ஆனந்தராஜ் ஆகியோரும், தமிழ்க் கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தை இந்துக் கல்லூரி மாணவி பாத்திமா தில்ஷானாவும்,

  இரண்டாம் இடத்தை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவி அனுவும், ஆங்கில கட்டுரைப் போட்டிக்கான முதல் இடத்தை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவி அபிமாவும், இரண்டாம் இடத்தை இந்துக் கல்லூரி மாணவி கவிதாவும், கவிதைப் போட்டியில் இந்துக் கல்லூரி மாணவர் பால்நாயகமும் வெற்றி பெற்றனர்.

  பேச்சுப் போட்டியில் தமிழ், ஆங்கிலம் என இரு பிரிவுகளிலும் முதல் இடம் பெற்ற மாணவர்-மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

  மாவட்ட யூத் ரெட்கிராஸ் சார்பில் ஆகஸ்ட் 12-ல் நடைபெறும் ஜெனீவா தின விழாவில், மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்குவார் என யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வீ. வேணுகுமார் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai