சுடச்சுட

  

  குமரி: ஆக.9-ல் தேசிய நாடார் செயற்குழுக் கூட்டம்

  By கன்னியாகுமரி,  |   Published on : 05th August 2013 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் வாழும் நாடார் இனமக்களை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய அளவிலான செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 9,10-ம் தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.

  இது தொடர்பாக சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

   நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பெயர்களில் கோடிக்கணக்கான நாடார் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

  அவர்களை பாரதிய கல்சூரி ஜெய்ஸ்வால் நாடன் சம்வர்கிய மஹாசபா என்ற பெயரில் ஒரே பெயரின் கீழ் கொண்டு வந்துள்ளோம். மேலும் இந்த அமைப்பை வலுப்படுத்தும் விதமாக கன்னியாகுமரியில் இம்மாதம் 9,10-ம் தேதிகளில் தேசிய அளவிலான செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

  நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கன்னியாகுமரி மலங்கரை பவனில் நடைபெறும் இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.விஜயராகவன், பாரதிய கல்சூரி அமைப்பின் புரவலர்களான மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், ஸ்ரீ பசந்தலால்ஷா, வீத்குமார் ஜெய்ஸ்வால், பாரதிய அகில இந்திய தலைவர் சஞ்சய்குமார் ஜெய்ஸ்வால், பொதுச்செயலர் லால்சந்த் எச்.குப்தா, பொருளாளர் ராதாகிருஷ்ண குப்தா, எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., நாடார் மஹாஜன சங்கப் பொதுச்செயலர் கரிக்கோல்ராஜ், சென்னை வாழ் நாடார் சங்கத் தலைவர் பி.சின்னமணி நாடார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.

  தெஷணமாற நாடார் சங்கத் தலைவர் டி.ஆர்.சபாபதி, பெண்கள் பிரிவின் பாரதிய கல்சூரி தேசிய துணைத் லைவர் எம்.திலகபாமா, பாரதிய கல்சூர் தேசிய கமிட்டி உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai