சுடச்சுட

    

    நாகர்கோவில் கிறிஸ்தவக் கல்லூரியில் கருத்தரங்கு

    By நாகர்கோவில்,  |   Published on : 05th August 2013 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியர் பானர்ஜி அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விநாடி வினா போட்டி மற்றும் வேதியியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கல்லூரியின் வேதியியல் துறையும், ஸ்காட் பயின்றோர் கழகமும் இணைந்து விநாடி வினா போட்டி மற்றும் கருத்தரங்கத்தை நடத்தின.

     விநாடி வினா போட்டிக்கு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இ. ஸ்டான்லி பாய் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜே. மார்கிரட் பியூலா வரவேற்றார்.

    முன்னாள் பேராசிரியர் சி. குமரேசபிள்ளை போட்டிகளை தொடக்கி வைத்தார்.  கல்லூரி முன்னாள் முதல்வரும், ஸ்காட் பயின்றோர் கழகச் செயலருமான ஜேம்ஸ் ஆர். டேனியல் போட்டிகள் குறித்து விளக்கினார். மொத்தம் 52 மாணவர்கள் கலந்து கொண்டனர். முனைவர் ஜி. ஆலன் ஞானராஜ் போட்டிகளை நடத்தினார்.

     போட்டியில் ஹெப்ரோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வித்யாலயா பள்ளி இரண்டாவது இடத்தையும், மார்த்தாண்டம் குட்ஷெப்பேட் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

    முதலிடம் பெற்ற பள்ளி அணிக்கு சுழற்கோப்பையும், வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    மாலையில் வேதியியல் கருத்தரங்கு நடைபெற்றது. முன்னாள் பேராசிரியரும், துறைத் தலைவருமான சி. சித்ரா தோமஸ் பேசினார்.

    முன்னாள் துணை முதல்வர் தியோடர் லவ் ஜாய்குமார் சிங் வாழ்த்துரை வழங்கினார்.

    கேரள பல்கலைக்கழக சுற்றுப்புறவியல் துணைத் தலைவர் சலோம் ஞான தங்கா, பயின்றோர் கழகப் பொருளாளர் கே.கே.மோகன்தாஸ், முனைவர் எம். சுரேஷ் சந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai