சுடச்சுட

  

  பகவதியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே மரக்கன்றுகள் நடப்படும்

  By கன்னியாகுமரி,  |   Published on : 05th August 2013 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும் என அமைச்சர் கே.டி.பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

  கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் 5 ஏக்கர் பரப்பளவில் வடக்குத் தெருவில் அமைந்துள்ளது.

  குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை விவசாயத்துக்காக திறக்கப்படும்போது கடைக்கோடிப் பகுதியில் அமைந்துள்ள குமரிசாலைகுளம் நிரப்பப்பட்டு அங்கிருந்து பாபநாச கால்வாய் மூலம் பகவதியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரப்பப்படுவது ஐதீக முறையாகும்.

   பாபநாச கால்வாய் பராமரிப்பின்றி இருந்ததால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இம்முறை கடைப்பிடிக்கப்படாமல் இருந்து வந்தது.

  இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2011-ம் ஆண்டு கால்வாய் சீரமைக்கப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டு தெப்பத்திருவிழா நடத்தப்பட்டது.

  இந்நிலையில் அண்மையில் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட நிலையில் குமரிசாலை குளம் நிரப்பப்பட்டு பாபநாச கால்வாய் வழியாக பகவதியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்போது 25 அடி கொண்ட இந்த தெப்பக்குளம் நிரம்பியுள்ளது.

  இதனை பார்வையிட்ட அமைச்சர் பச்சைமால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெப்பக்குளத்தைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்புடன் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குளத்தின் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் சிவசெல்வராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் காரவிளை எம்.செல்வன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் பா.தம்பித்தங்கம், துணைச் செயலர் இ.முத்துசுவாமி, கன்னியாகுமரி பேரூர் செயலர் பி.வின்ஸ்டன், மாவட்டப் பிரதிநிதி ஹேமந்த்குமார், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சி.காட்வின் ஏசுதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேஷ், பகவதியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai