சுடச்சுட

    

    தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்டத் தலைவர் எம். ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சி. வள்ளிவேலு, மாநில துணைத் தலைவர் ஏ. அலெக்ஸாண்டர், மாவட்ட அமைப்புச் செயலர் ஆர். கிருஷ்ணதாஸ், மகளிர் பிரிவுச் செயலர் பி. தேவசாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி. சுப்பையா, முன்னாள் மாநில அமைப்புச் செயலர் ஐ. ஜிம்சன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எஸ். ஹெர்மித் ஆர். சிராப், மாவட்டச் செயலர் பி.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை ஏற்படுத்திய முதன்மைக் கல்வி அலுவலரைப் பாராட்டியும், மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கியும் அமைச்சர் கே.டி. பச்சைமால் பேசினார்.

    நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., டீம் ஒருங்கிணைப்பாளர் பி. ஆன்ட்ரு வில்சன், மாவட்டப் பொருளாளர் ஜான் இக்னேஷியஸ், மாவட்டச் செயலர் எம். ஜான் ஜெரோம் மிலாடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai