சுடச்சுட

  

  தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By குலசேகரம்,  |   Published on : 06th August 2013 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உயர் மருத்துவ சிகிச்சை கேட்டு களியல் கிராம அலுவலகம் முன்பு தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

   கடையல் அருகேவுள்ள ஒரு தனியார் ரப்பர் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக வழங்கி வந்த உயர் மருத்துவ சிகிச்சையை தற்போது வழங்க மறுத்து வருகிறது.

   இக் கோரிக்கையை வலியுறுத்தி இங்கு பணிபுரியும் சிஐடியூ ஆதரவு தோட்டம் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தொடர் வேலை நிறுத்தம் செய்து வரும் இத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை களியல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதற்கு தோட்டம் தொழிலாளர் சங்கத் தலைவர் பி. நடராஜன் தலைமை வகித்தார். இதில் கடையல் பேரூராட்சித் தலைவர் எஸ்.ஆர். சேகர், தொழிலாளர்கள் நாணுகுட்டன், ராகவன், வேலுக்குட்டி, அகஸ்டின் லீகோ உள்ளிட்டோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai