சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவு அளிப்பு

    By சாத்தான்குளம்  |   Published on : 06th August 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை மாற்றுத் திறனாளி குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

    பள்ளிகளுக்கு கட்டட வசதிகள், கற்றல் கற்பித்தல், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கிராம கல்விக் குழுக்கள் அமைத்தல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவிகள் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்து வருகிறது. அதன்படி கொம்மடிக்கோட்டை மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பகல் நேர கவனிப்பு மையத்தில் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுடலைமணி தலைமை வகித்தார். பள்ளக்குறிச்சி சாரதா நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சிலுவைஅருள் மாணவர், மாணவிகளுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டியை வழங்கினார்.

    இதில் ஆசிரிய பயிற்றுநர்கள் ஜான்சன், ஜெபக்குமார், ஜெகதீஷ் பெருமாள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai